என்னங்க இந்த நேரத்தில் என்று கேட்டதற்கு.
பாம்பு கடிச்சிறுச்சி என்றார்.
உடனே ஆஸ்பித்திரிக்கு போகாம இங்க வந்திருக்கிங்களே
இப்ப தாங்க கடிச்சுச்சு ஆஸ்பித்திரிக்கு போற வழியில் உங்க வீட்டுக்கு வந்தேங்க என்றார்.
ஙே
போனவாரம் உங்க வீட்டுக்கு கோயில் பிரசாதம் குடுக்கவந்தப்ப உங்க வீட்டில் சிறியாநங்கை இருப்பதை பார்த்தேன். அது பாம்பு மற்ற விச கடிக்கு சிறந்தது, சிறியாநங்கை இருக்குதா என்றார்.
சிறியா நங்கை |
இருக்குதுங்க வேணுமுன்னா எல்லாத்தையும் எடுத்துக்குங்க என்றோம். நல்ல வேளை அதன் அருமை தெரியாம அது களைன்னு பிடிங்கி எறிய இருந்தோம். 3 நாள் கழித்து வந்திருந்தார் என்றால் அது இருந்திருக்காது.
நன்றி சொன்ன அவர், 2 செடிகளில் இருந்து இலைகளை உருவி தின்றுகொண்டு சென்றார். அதான் சிறியா நங்கை என்று அப்போது தான் தெரிந்துகொண்டோம்.
அப்ப தான் சிறியாநங்கையின் பயன்பாடு எங்களுக்கு தெரிந்தது. அச்செடியை நாங்க வைக்கவில்லை அது பாட்டுக்கும் தானா வளர்ந்திருந்து.
அடுத்த நாள் மீதி இருந்த இலையை தின்று பார்த்தோம் அப்பா என்ன கசப்பு.
-நடந்ததை அப்படியே எழுதியுள்ளேன். இது புனைவு அல்ல.
அப்புறம் சிலர் சிறியாநங்கை இருந்தா பாம்பு வராது என்றார்கள். இச்செடியின் காற்று பாம்புக்கு ஆகாதாம். கடும் கசப்பு என்பதால் நீரழிவு பிணிக்கு இது மருந்தாம்.