செவ்வாய், டிசம்பர் 26, 2006

BMI தவறான முறை

உடல் பருத்து விட்டதாவென்று அறிய "Body Mass Index - BMI" என்ற அளவுகோலை பயன் படுத்துகின்றனர். இது சரியான முறையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏன்? உயரத்தையும் எடையையும் வைத்துதான் BMI அளவை கணக்கிடுகிறார்கள். முக்கியமாக இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறியது பால் & வயது. இதன் காரணமாகவே BMI ஐ கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் உடல் ஊதி போய்விட்டதா என்பதை கண்டறிய BMI நாடும், நாடச்சொல்லும் மருத்துவர்களும் உடற்கூறு வல்லுனர்களுமே அதிகம்.

இந்த முறையை தவறென்று நான் கூறுவதற்கு காரணம்??

உயரம் 165 செ.மீ & எடை 65 கி.கி இதற்கான BMI 23.9

இது 22 வயது வாலிபன் & 40 வயது பெண், 70 வயது ஆண், 80 வயது பெண், 20 வயது இளைஞி எல்லோருக்கும் 23.9 என்ற அளவு பொதுவானது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஒருவர் உடற்பயிற்சி செய்யாதவர் மற்றொருவர் கடினமாக உடற்பயிற்சி செய்பவர் இருவரின் உடல் அளவும் ஒன்று ( இடுப்பு, மார்பு ) ஆனால் உடற்பயிற்சி செய்பவரின் எடை உடற்பயிற்சி செய்யாதவரின் எடையை விட அதிகம். நல்ல உருண்டு திரண்ட சதையின் காரணமாக எடை கூடுதலாக இருக்கும் அதற்காக அவரை எடை அதிகமானவர் என்று கூறலாமா? இது போன்ற பல அடிப்படை தவறுகள் உள்ள முறையை எவ்வாறு எல்லோரும் அறிவியல் பூர்வமானது என்று பரிந்துரைக்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை.

இது நான் தமிழ்நெட் 99 விசை பலகையை பயன் படுத்தி எழுதும் பதிவு.

8 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

குறும்பன்,

எனக்குத் தெரிந்து இந்த முறை ஓரளவிற்கு உடல் பருமனைச் சுட்டிக் காட்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்கள். இது மிக துல்லியமான முறை என்று சொல்வதில்லை.

Machi சொன்னது…

குமரன், இதை மருத்துவர்கள் பயன்படுத்துவதாலயே பலர் இதை அறிவியல் முறை என்று கருதுகின்றனர், அதுவுமில்லாமல் பல இடங்களில் உடல் பருமனாகிவிட்டதா என்று அறிய 'BMI' முறையை பயன்படுத்த சொல்கின்றனர்.

நமது நண்பர்கள் எவ்வளவு பேர் 'BMI' கணக்கு பார்க்கின்றனர் என்பது தெரிந்தது தானே? என்னடா குண்டாகிட்ட மாதிரி தெரியுது என்று சொன்னால் 'BMI' அளவுபடி சரியான அளவு தான், இன்னும் 1 point ஏறலாம் என்று சொல்லுவாங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

என்னைக்குமே எண்களும் சூத்திரங்களும் கணக்குப் போட மட்டுமே உதவும். இது விடையை தராது. வெரும் எண்ணை மட்டுமே தரும். உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள். பின் மருத்துவரை அனுகுங்கள்

துளசி கோபால் சொன்னது…

வயித்துலே பாலை வார்த்தீங்க!!!!!


பாலால் இன்னும் கொஞ்சம் குண்டானால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை:-))))))

குண்டு, ஒல்லி எல்லாத்தையும் விட்டுட்டு, மனுஷன் மகிழ்ச்சியா இருக்கானா இல்லையா என்றதுக்குத்தான்
நான் முக்கியத்துவம் தருகிறேன்.

வடுவூர் குமார் சொன்னது…

தமிழ்நெட் 99 உபயோகப்படுத்தினா வேறு முடிவு வரும் என்று எதிர்பார்த்தீர்களா? :-)

Machi சொன்னது…

SUREஷ் மருத்துவர்கள் இதை பயன்படுத்துவதாலயே பலர் இதை அறிவியல் முறை என்று கருதுகின்றனர். எனக்கு தெரியும் நான் எவ்வளவு குண்டு என்று ;-))

Machi சொன்னது…

பாலால் இன்னும் கொஞ்சம் குண்டானால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை:-))))))

குண்டு, ஒல்லி எல்லாத்தையும் விட்டுட்டு, மனுஷன் மகிழ்ச்சியா இருக்கானா இல்லையா என்றதுக்குத்தான்
நான் முக்கியத்துவம் தருகிறேன்.\\

வாங்க துளசி, மிகவும் மகிழ்ச்சியா இருக்கறதனால தான் குண்டு ஆயிட்டேன்னு சொல்லலைன்னா சரி தான். :-))

Machi சொன்னது…

வடுவூர் குமாருக்கு இந்த குசும்பு ஆகாது :-)))