சின் முத்திரை
செய்முறை:
- உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
- ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொடவேண்டும். மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக்கொண்டிருக்கக்கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம். மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
பலன்கள்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.
செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை
செய்முறை:
கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு)விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும்.
வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.
பலன்கள்:
காதுவலி குறையும்.