வெள்ளி, ஜனவரி 03, 2014

செவி மற்றும் சின் (தியான) முத்திரைகள்

தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.


சின் முத்திரை
செய்முறை:
  • உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
  • ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொடவேண்டும். மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக்கொண்டிருக்கக்கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம். மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பலன்கள்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.  


செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை
செய்முறை:
கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு)விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும்.  நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும்.

வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.

பலன்கள்:
காதுவலி குறையும்.
காது கேளாதவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்பதில் முன்னேற்றம் இருக்கும்.
காது வலி போனவுடன் அல்லது காது கேட்க ஆரம்பித்தவுடன் இம்முத்திரையை செய்வதை நிறுத்தி விட வேண்டும்.



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

apana, Apana Vayu Mudra, Linga Mudra are good one.