நமக்கு தலைவலி, பல்வலி, உடம்புவலி வந்தால் மருத்துவரிடம் செல்லாமல் நாமே ஆஸ்பரின் போன்ற வலி நிவாரணி எடுத்துக்கொள்வோம். நமக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது தவறில்லை. ஆனால் சில சமயம் நம் மக்கள் வலி நிவாரணத்துடன் ஒரு 2 பெக் சரக்கையும் உள்ளே தள்ளுவார்கள் நிம்மதியாக தூங்க. அது பீர், ஒயின், பிராந்தி, விஸ்கி, ரம் , ஜின் என்று ஆளுக்கு தகுந்தாற் போல் மாறும். இது கொஞ்சமும் நல்லதல்ல.
வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலக்கும் போது நமது உடம்புக்கு பல புதிய தொல்லைகள் வரும் எனவே வலி நிவாரணி எடுக்கும் போது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சாராயத்தை குடிக்காதிர்கள். சாராயத்தை ஊத்தி வலி நிவாரணம் பெறுவதாக இருந்தால் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதிர்கள். கவனம் தேவை.
கீழுள்ள அட்டவணை எந்தவகையான வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலந்தால் எந்த வகையான நோய் வரும் என்று தெரியப்படுத்தும்.
Pain Reliver | Risk ( When Mixed with Alcohol )> |
*Acetaminophen (Tylenol) | *sk of liver damage |
*Aspirin and other nonsteerodial, anti-infammatory drugs ( Bayer, Exedrin) | *Risk of gastrointestinal problems, bleeding and ulcers; risj of high blood pressure. |
*Muscle relaxers (skelaxin) | *Risk of seizures , drowsiness and breathing problems. |
*Narcotics ( Percocet, Vicodin) | *Risk of drowsiness, confusion and breathing problems. |
2 கருத்துகள்:
Tylenol மட்டுமல்ல எந்த வித உட்கொள்ளப்படும் வலி நிவாரணியாக இருந்தாலும் சரி, எந்த மருந்தாக இருந்தாலும் சரி அது முதலில் பாதிக்கக் கூடிய உருப்பு என்றால் அது கல்லீரல் தான்...
கல்லீரல் தான் நம் உடல் செல்களினால் வெளியேற்றப்படும் கழிவு மற்றும் நச்சுப்பொருட்களை enzymes கொண்டு உடைத்து அதை neutralize செய்யும் உருப்பு. ஆகவே அது தான் உடலின் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் செல்கள் கொண்ட பகுதி.
ஒரு Tylenol மாதம் ஒரு முறை உட்கொண்டால் எல்லாம் எதுவும் நடக்காது... நித்தம் மூன்று நான்கு Tylenol உட்கொண்டால் எதேனும் நடக்க வாய்ப்பு உள்ளது...
நம்மூரில் Tylenol என்றால் தெரியாது... Ibuprofen (Brufen) வகை மருந்து அது..!
Aspirin (Acetyl salycylic acid) என்னவெல்லாம் செய்கிறது என்றே தெரியாது...அது ஒரு வலி நிவாரணி, ரத்த நாளத்தை விரிவடையச் செய்யக் கூடியது...பயங்கரமாக Acidity உருவாக்கக் கூடியது...ஆகவே அது வயிறு சார்ந்த பிரச்சனை உருவாக்கும். ஆனால் Bayer கொடுக்கும் Aspirin இப்போதெல்லாம் சோடா போல் Effervescent Tablets ஆகக் கொடுக்கிறது...( நம்மூரில் Disprin, Disprin C with Vitamin C) அந்த acidity யைக் குறைக்க. இதுவும் பல நாட்கள் நித்தம் உட்கொண்டால் தான் பிரச்சனையே.
நம்மூர் மஞ்சள் பொடியில் கூட இந்த Salycilic acid விஷயம் நிரையவே இருக்கு என்பது குறிப்பிடத் தக்கது..
புதிய செய்திகளுக்கு நன்றி வஜ்ரா.
கருத்துரையிடுக