1. இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் வேண்டும். இது தான் முதன்மையானது இது இல்லைன்னா புகை பிடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது.
2. புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு தோணும் அது பொய்யின்னு (மாயை) தெரிஞ்சுக்குங்க. ஆனா புற்று நோய் வர வாய்ப்பிருக்கு, இதை மனசுல போட்டுக்குங்க.
3. இனிமே புகை பிடிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியதும் இருக்கிற எல்லா சிகரெட்டையும் தூக்கி வீசிடனும். ஒன்னும் உங்கக்கிட்ட இருக்கக்கூடாது. தூக்கிப்போடறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும் :-( என்ன பண்றது பழக்கத்தை விடணுமே. சிகரெட்டின் பெருமை உணர்ந்து வாய சுடுற வரைக்கும் சிகரெட்டை இழுத்தத இங்கு நினைத்து கதறக்கூடாது. நாளையில் இருந்து பிடிக்கமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கே இருக்கிற எல்லா சிகரெட்டையும் புகைக்காதிங்க. நிறைய பேர் அப்படி தான் செய்வாங்க , நாளைக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சிகரெட் புடிக்கிறத விட மாட்டாங்க, அவங்களுக்கு நாளைக்கு வரவே வராது.
4. புகைப்பதை நிறுத்தியாச்சுன்னு உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க, உடனே சில நலம் விரும்பிகள் 555 வாங்கி பத்து மச்சின்னு சொல்லுவாங்க, சில பேர் பத்த வைத்தே கொடுப்பாங்க, அந்த சதியில் விழுந்துடாதிங்க. நினைச்சிப்பாருங்க வெறும் கோல்ட் பிளேக்/சிசர்/பீடி ஒன்னு குடுன்னு கேட்டப்போ குடுத்தாங்களா? இல்லையே! இப்ப என்ன கரிசனம்??? ( கொடுத்தாலும் அடுத்த நாளே கடன் காரன் மாதிரி உங்களை வாங்கி தர சொல்லிடுவாங்கல்ல)
5. நண்பர்கள் கூட போகும் போது அவர்கள் 1 பாக்கட் வாங்கி உங்கக்கிட்ட 1 சிகரெட் எடுத்துக்க சொல்லி நீட்டுவாங்க , பழக்கத்தில் எடுத்து பத்த வச்சிறாதீங்க. வேண்டாம்! சிகரெட்டை விட்டாச்சுன்னு சொல்லிடுங்க.
6. இப்படி பல பல தடைகளையும் மீறி வெற்றிகரமா ஒரு வாரம் சிகரெட் புகைக்காம இருந்திங்கன்னா உங்களை பாராட்டி ஒரு டம்ளர் பழரசம் அருந்துங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.
7. ஒரு வாரம் கழித்து சிகரெட் பத்த வைக்க ஆசை வரும். ஒன்னு மட்டும் யாருக்கும் தெரியாம அப்படின்னு சொல்லிட்டு சிகெரெட்டை கையில் எடுக்காதிங்க. அப்புறம் விட முடியாது.
8. சில சமயம் அடுத்தவர்கள் சிகரெட் புகைப்பதை பார்த்தா ரெண்டு இழுப்பு இழுக்க தோனும் இந்த மாதிரியான நேரங்கள் தான் மிக முக்கியமானது. இது ஒரு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு இருக்கும், இந்த நேரத்தில் மனதை வேறு திசையில் செலுத்தி புகைக்கும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டீ, காபி, பழரசம் குடிங்கள் அல்லது புகைக்கிற ஆளை திட்டுங்கள் ( மனசுக்குள் தான் ) அந்த 5 நிமிடம் போய் விட்டால் புகைக்கும் எண்ணமும் போய் விடும்.
9. புகை பிடிக்காம 1 மாசம் ஓட்டிட்டீங்கன்னு வைங்க உங்களை நீங்களே பாராட்டி 1 பழரசம் குடிங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.
10. இதே மாதிரி ஒரு 3 மாசம் ஓட்டுங்க., உங்களை பாராட்டி 1 பழரசம் குடிங்க. காசு இருந்தா நண்பர்களுக்கு வாங்கி கொடுங்க. ஆனா பழரசம் குடிக்கற பழக்கத்தை விடாம தொடருங்க.
11. உங்களால புகைக்காம இருக்க முடியும்ன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் என்ன புகை பழக்கத்துக்கு பெரிய கும்பிடு தான். உங்களுக்கு வாழ்த்துக்கள்.
12. அப்புறம் மறக்காம புகை பிடிக்கும் உங்க நண்பர்களை திருந்த சொல்லுங்க.
13 கருத்துகள்:
குறும்பன்
இம்புட்டு கஸ்டம்லாம் வாணாங்க...
இனிமே புடிக்தீங்கன்னு அன்பா சொல்ல ஒரு காதலியோ..
இனிமே புடிச்சீங்கன்னா அவ்ளோதான்னு சொல்ல ஒரு பொண்டாட்டியோ..
இருந்தா போதும்...
நீங்களே நெருப்பு, மூஞ்சில ஊதுனா பொசுக்கிட மாட்டிங்க?
சில சமயம் மூஞ்சில ஊதுனா நல்லா தான் இருக்கும் (கப்பு வாயன் ஊதுனா கொடுமையா இருக்கும்). Passive புகை ரொம்ப கெடுதல். புகை ஒத்துக்காது தள்ளி ஊதுங்கன்னு சொல்லுங்க, கேக்கலைன்னா முட்டியால சிகரெட்டையும் புகைவுடர வாயையும் சேர்த்து ஒரு குத்து விடுங்க.
வன்முறை பிடிக்காத ஆளா இருந்தா அந்த வீணா போன வெண்ணைக்கிட்ட இருந்து தள்ளி போயிடுங்க. மூஞ்சில ஊதர ஆளு உங்களை விட பலசாலியா இருந்தா பேசாம தள்ளி போயிடுங்க. அது புத்திசாலித்தனம் :-))
சாத்வீகன் நீங்க சொல்றது தப்பு. அவங்க அப்படி தான் சொல்லுவாங்க அதனால நம்மாளு என்ன பண்ணுவாறுன்னா அவங்களுக்கு தெரியாம தம் அடிப்பார். இது மாதிரி காதலிக்கும், பொண்டாட்டிக்கும் பயந்துக்கிட்டு பொட்டிகடைக்கு உள்ளால புகைய அவசர அவசரமா இழுத்துட்டு விக்ஸ் , பபுல் கம் அது இதுன்னு திங்கற ஆள நீங்க பார்த்ததில்லையா?
Virginia-விலிருந்துகொண்டே tobacco-வை விட்டுவிட ஒரு பதிவா? நன்றாக இருக்கிறது.
என்னங்க லதா இப்படி சொல்லிட்டீங்க :-)
இப்ப வெர்ஜீனியாவில் அரசாங்க அலுவலகங்களில், வாகனங்களில் புகைக்கு தடை போட்டுட்டாங்க தெரியுமா உங்களுக்கு. காவலர்களுக்கு மட்டும் விதிவிலக்கு குடுத்திருக்காங்க. அதாவது அவங்க மட்டும் காரில் புகைக்கலாம் வேற யாரும் கூடாது.
nalla pathivu.
ஒவ்வொரு முறையும் பழரசம் அருந்த சொல்லியிருகிறீர்கள், பழரசத்திற்க்கு புகை பழக்கத்தை விடுவதற்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா??? [ I mean any scientific reason???, or just to encourge oneself he need to take fruit juice?]
திவ்யா, எனக்கு தெரிந்து இதுவரை அப்படி ஒரு தொடர்பும் இல்லை. (தொடர்பு இருக்கலாம் , இருக்கனும்)
பழரசம் அருந்துவது உடம்புக்கு நல்லது என்ற முறையிலும் , புகையினால் பாதிக்கப்பட்ட நிரையீரலுக்கு பழரசம் சிறிய தெம்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் அப்படி சொன்னேன். புகை பிடிக்கிற ஆளுங்க நிறைய டீ அல்லது காபி குடிப்பாங்க ஒரு மாறுதலுக்கு பழரசம் அருந்துவது நல்லதில்லையா?
அப்புறம் எங்க எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் பழரசம் குடிக்க சொல்லி விளம்பரம் செய்யறது நம்ம பழக்கம். :-))
நன்றி அனானி.
கண்டிப்பா உங்க பதிவில கொடுத்திறுக்குற மாதிரி கடைப்பிடிச்சாங்கன்னா சக்ஸஸ்தான்.
[அப்டியே பழரசம் குடிச்சி குடிச்சி பழரசத்துக்கு அடிமையாயிட்டா?]
//[அப்டியே பழரசம் குடிச்சி குடிச்சி பழரசத்துக்கு அடிமையாயிட்டா?]//
அப்படி ஆகனும் என்பது தான் என் ஆசை. நல்ல பழகத்துக்கு அடிமையாவது தப்பில்லையே ஜி.
vayiru kuraiyum vali i sollavillaye.pathuv kal yellam nanraga ullathu.thatangal illatha yelithu.valthukal.
nandRi Anony. en vayiRu innum kuRaiyala, athai konjam kuRaicchukkittu ezuthalaam enRu irrukkeen.
viraivil vayiRai kuraiththu pathivai ezuthukiReen.
கருத்துரையிடுக