ஞாயிறு, மார்ச் 02, 2014

ஆகாச முத்திரை, வாயு முத்திரை

வாயு முத்திரை

வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.

சின் முத்திரையில் ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் நுனியை தொட்டுக்கொண்டிருப்போம்.  



பலன்கள்
  • ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.
  • இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.
  • சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும். 
  • நடுக்குவாதம் (Parkinson)  உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.
  • கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்.
     
ஆகாச முத்திரை

ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக்கொண்டிருப்பது.

சூனிய முத்திரையில் நடு விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டிருப்போம்.





பலன்கள்:
  • இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.
  • இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது. மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 
  • இசிடிராய்டு  (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.

நடக்கும் போது  இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்.




கருத்துகள் இல்லை: