வியாழன், ஜனவரி 08, 2015

இருமல் மூச்சிலுப்புக்கு


குழந்தைகளுக்கு பனி காலத்தில் சளி, இருமல், மூச்சிலப்பு (wheezing) அதாவது மூச்சு விட சிரமப்படுவார்கள் (அப்போது இதய துடிப்பு அதிகமாக இருக்கும் அதை வைத்து அறியலாம்)  ஆசுத்துமா மூச்சிலுப்பு வேற. அதுக்கு எனக்கு மருந்து என்னன்னு தெரியலை.  பனியிலோ, மழையிலோ நனையக்கூடாது, குளிரில் தலையை நன்றாக மூடி வெளியில் செல்லவேண்டும், பனிக்கூழ் (Ice cream) உண்ணக்கூடாதுன்னு மட்டும் தெரியும்.

அமெரிக்காவில் தான் இப்ப பனி கொட்டுதே; கொட்டாத இடத்தில் கடும் குளிர் உள்ளதே. குளிர் கால பிணி இது, அதாவது அக்காலத்தில் தான் அதிகபேருக்கு வரும்.

அக்குழந்தைகளை மருத்துவரிடம் காண்பிப்பார்கள். நாமும் ஏதாவது செய்தாகனும் இல்லையா?

அக்குழந்தைகளுக்கு நிறைய வெந்நீரை குடிக்க கொடுங்கள். மறுத்தால் பாலை தவிர நீராகமாக எதையாவது கொடுங்கள். பால் சளிக்கு நல்லதில்லையாம்.

அவர்களால் சரியாக தூங்க முடியாது அதனால நம்மாளும் தூங்க முடியாது.

இரவில் நன்றாக தூங்க தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் சூடாக்கி அதனுடன் கற்பூரத்தை கலந்து குழந்தையின் மார்பிலும் முதுகிலும் தேய்க்கவேண்டும். (ரொம்ப சூடு ஆபத்து, தோலை பதம் பார்த்து விடும்)

பச்சை கற்பூரம் நல்லது அது கிடைக்காவிட்டால் சாமி கும்பிட பயன்படுத்தும் சூடம் (கற்பூரம்).

எனக்கு சொன்னவரிம் பச்சை கற்பூரம் இல்லாததால் சாமி கும்பிட பயன்படுத்தும் கற்பூரம் தான் பயன்படுத்தினார். பலன் பெற்றார்.
இது அவர் எனக்கு கூறியது தான்.


கருத்துகள் இல்லை: