திங்கள், அக்டோபர் 23, 2017
இரத்தக்கட்டுக்கு நாட்டு மருத்துவம்
இரத்தக்கட்டுக்கு நான் பார்த்த நாட்டு மருத்துவர் புளியங் கொட்டையும் புண்ணாக்கையும் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்ட சொன்னார்.
என்னடா ஆளு ஆளுக்கு மாற்றி மாற்றி சொல்றாறேன்னு நினைத்தேன். இரண்டும் கேட்கும் என்று ஒருவர் கூறினார்.
சிந்தித்து பார்த்ததில் இரத்தக்கட்டு சமீபத்தில் ஏற்பட்டது என்றால் புளியங்கொட்டையை மாவையும் நாள் பட்டது என்றால் புண்ணாக்கை அப்ப சொன்னதையும் தெரிந்து கொண்டேன்.
தண்ணியை கொதிக்க வைத்து அதில் தூளான புளியங்கொட்டையை போட்டு மாவாக்கி இரத்தக்கட்டு உள்ள இடத்தில் அப்பனும்.
ஒரு அக்கா இரத்தக்கட்டுக்கு மைதா மாவை குழைத்து அப்ப சொன்னார்.
புளியங்கொட்டை மாவு, புண்ணாக்கு, மைதா மாவு கெட்டிச் சாறு என்று ஏதோ ஒன்றை பயன்படுத்தி இரத்தக்கட்டிலிருந்து விடுபடுவீர்களாக.
லேபிள்கள்:
இரத்தக் கட்டு,
நாட்டு மருத்துவம்,
புண்ணாக்கு,
புளியங் கொட்டை,
மைதா மாவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக