செவ்வாய், நவம்பர் 07, 2017

கபாலபதி மூச்சுப் பயிற்சி



சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும் கூன் போட்டு உட்காரதீர்கள். எப்படி வேண்டுமென்றாலும் உங்கள் வசதிப்படி உட்காரலாம் .ஆனால் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும்.  இது தான் கபாலபதி இது மாறாது. விசையுடன் மூச்சை வெளியிடும் போது தலை ஆடக்கூடாது அடிவயிறு உள்போகலாம் நெஞ்சு ஆடலாம்.

நான்கைந்து முறை நன்றாக மூச்சை இழுத்து விடவும் பின்பு இயல்பாக ஒரு நிமிடம் மூச்சு விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக
அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும் இதே மாதிரி 5 நிமிடங்களுக்கு செய்யவும். பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள்  கபாலபதி செய்யவும் பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள் கபாலபதி செய்யவும்

வேறு முறை
நாசி சுத்தி முத்திரை
நாடி சுத்தி முறையில் செய்வது. அதாவது இடது மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வலது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது. பின்பு வலது 
மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து  இடது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது, இது மாதிரி மாற்றி மாற்றி 5 நிமிடங்கள் செய்து பின் 1 நிமிடம்  ஓய்வெடுத்து பின் 5 நிமிடம் செய்யனும். 1 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் 5 நிமிடம் செய்யவும். (இது சிறப்பான முறை ஏன்னா 2 நாசியும் தூய்மையாகும்)

வேறு முறை
இடது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் வலது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

வேறு முறை
வலது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் இடது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?
வலிப்பு உள்ளவர்கள், வெர்டிகோ உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாதாவிடாய் கால பெண்கள், கருவுற்ற பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், பக்க வாதம் உள்ளவர்கள், குடல் இறக்கம் உள்ளவர்கள். செய்யும் போது தலை சுற்றினாலோ, தலை வலித்தாலோ செய்வதை நிறுத்திவிடவும், இரு நாட்களுக்கு இதேமாதிரி செய்யும் போது நிகழ்ந்தால் மருத்துவரை பார்க்கவும்.

பலன்
இதை செய்யும் போது சளி இருந்தால் அது வந்து விடும் அதனால் கபாலபதி செய்யப்படும் போது கைக்குட்டையை வைத்துக்கொள்ளவும். இதை செய்தால்  தூக்கம் பறந்து விடும். அதனால் இரவில் செய்தால் தூக்கம் வருவது தள்ளி போகும். மூளை சுறுசுறுப்பு அடையும். இதை செய்து விட்டு நாடி சுத்தி மூச்சு  பயிற்சியை செய்யவும். ஏன்னா மூக்கின் ஓட்டைகள் இதனால் சளி இல்லாமல் தூய்மையாக இருக்கும் காற்று(மூச்சு) எளிதாக போய் வரும்






கருத்துகள் இல்லை: