திங்கள், அக்டோபர் 23, 2017
இரத்தக்கட்டுக்கு நாட்டு மருத்துவம்
இரத்தக்கட்டுக்கு நான் பார்த்த நாட்டு மருத்துவர் புளியங் கொட்டையும் புண்ணாக்கையும் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்ட சொன்னார்.
என்னடா ஆளு ஆளுக்கு மாற்றி மாற்றி சொல்றாறேன்னு நினைத்தேன். இரண்டும் கேட்கும் என்று ஒருவர் கூறினார்.
சிந்தித்து பார்த்ததில் இரத்தக்கட்டு சமீபத்தில் ஏற்பட்டது என்றால் புளியங்கொட்டையை மாவையும் நாள் பட்டது என்றால் புண்ணாக்கை அப்ப சொன்னதையும் தெரிந்து கொண்டேன்.
தண்ணியை கொதிக்க வைத்து அதில் தூளான புளியங்கொட்டையை போட்டு மாவாக்கி இரத்தக்கட்டு உள்ள இடத்தில் அப்பனும்.
ஒரு அக்கா இரத்தக்கட்டுக்கு மைதா மாவை குழைத்து அப்ப சொன்னார்.
புளியங்கொட்டை மாவு, புண்ணாக்கு, மைதா மாவு கெட்டிச் சாறு என்று ஏதோ ஒன்றை பயன்படுத்தி இரத்தக்கட்டிலிருந்து விடுபடுவீர்களாக.
லேபிள்கள்:
இரத்தக் கட்டு,
நாட்டு மருத்துவம்,
புண்ணாக்கு,
புளியங் கொட்டை,
மைதா மாவு
புதன், ஆகஸ்ட் 17, 2016
சிறியா நங்கை - மூலிகை செடி
ஒரு நாள் இரவு பிள்ளையார் கோயில் பூசாரி வீட்டுக்கதவை தட்டினார்.
என்னங்க இந்த நேரத்தில் என்று கேட்டதற்கு.
பாம்பு கடிச்சிறுச்சி என்றார்.
உடனே ஆஸ்பித்திரிக்கு போகாம இங்க வந்திருக்கிங்களே
இப்ப தாங்க கடிச்சுச்சு ஆஸ்பித்திரிக்கு போற வழியில் உங்க வீட்டுக்கு வந்தேங்க என்றார்.
ஙே
போனவாரம் உங்க வீட்டுக்கு கோயில் பிரசாதம் குடுக்கவந்தப்ப உங்க வீட்டில் சிறியாநங்கை இருப்பதை பார்த்தேன். அது பாம்பு மற்ற விச கடிக்கு சிறந்தது, சிறியாநங்கை இருக்குதா என்றார்.
இருக்குதுங்க வேணுமுன்னா எல்லாத்தையும் எடுத்துக்குங்க என்றோம். நல்ல வேளை அதன் அருமை தெரியாம அது களைன்னு பிடிங்கி எறிய இருந்தோம். 3 நாள் கழித்து வந்திருந்தார் என்றால் அது இருந்திருக்காது.
நன்றி சொன்ன அவர், 2 செடிகளில் இருந்து இலைகளை உருவி தின்றுகொண்டு சென்றார். அதான் சிறியா நங்கை என்று அப்போது தான் தெரிந்துகொண்டோம்.
அப்ப தான் சிறியாநங்கையின் பயன்பாடு எங்களுக்கு தெரிந்தது. அச்செடியை நாங்க வைக்கவில்லை அது பாட்டுக்கும் தானா வளர்ந்திருந்து.
அடுத்த நாள் மீதி இருந்த இலையை தின்று பார்த்தோம் அப்பா என்ன கசப்பு.
-நடந்ததை அப்படியே எழுதியுள்ளேன். இது புனைவு அல்ல.
அப்புறம் சிலர் சிறியாநங்கை இருந்தா பாம்பு வராது என்றார்கள். இச்செடியின் காற்று பாம்புக்கு ஆகாதாம். கடும் கசப்பு என்பதால் நீரழிவு பிணிக்கு இது மருந்தாம்.

![]() |
| சிறியா நங்கை |

வியாழன், ஜனவரி 08, 2015
இருமல் மூச்சிலுப்புக்கு
குழந்தைகளுக்கு பனி காலத்தில் சளி, இருமல், மூச்சிலப்பு (wheezing) அதாவது மூச்சு விட சிரமப்படுவார்கள் (அப்போது இதய துடிப்பு அதிகமாக இருக்கும் அதை வைத்து அறியலாம்) ஆசுத்துமா மூச்சிலுப்பு வேற. அதுக்கு எனக்கு மருந்து என்னன்னு தெரியலை. பனியிலோ, மழையிலோ நனையக்கூடாது, குளிரில் தலையை நன்றாக மூடி வெளியில் செல்லவேண்டும், பனிக்கூழ் (Ice cream) உண்ணக்கூடாதுன்னு மட்டும் தெரியும்.
அமெரிக்காவில் தான் இப்ப பனி கொட்டுதே; கொட்டாத இடத்தில் கடும் குளிர் உள்ளதே. குளிர் கால பிணி இது, அதாவது அக்காலத்தில் தான் அதிகபேருக்கு வரும்.
அக்குழந்தைகளை மருத்துவரிடம் காண்பிப்பார்கள். நாமும் ஏதாவது செய்தாகனும் இல்லையா?
அக்குழந்தைகளுக்கு நிறைய வெந்நீரை குடிக்க கொடுங்கள். மறுத்தால் பாலை தவிர நீராகமாக எதையாவது கொடுங்கள். பால் சளிக்கு நல்லதில்லையாம்.
அவர்களால் சரியாக தூங்க முடியாது அதனால நம்மாளும் தூங்க முடியாது.
இரவில் நன்றாக தூங்க தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் சூடாக்கி அதனுடன் கற்பூரத்தை கலந்து குழந்தையின் மார்பிலும் முதுகிலும் தேய்க்கவேண்டும். (ரொம்ப சூடு ஆபத்து, தோலை பதம் பார்த்து விடும்)
பச்சை கற்பூரம் நல்லது அது கிடைக்காவிட்டால் சாமி கும்பிட பயன்படுத்தும் சூடம் (கற்பூரம்).
எனக்கு சொன்னவரிம் பச்சை கற்பூரம் இல்லாததால் சாமி கும்பிட பயன்படுத்தும் கற்பூரம் தான் பயன்படுத்தினார். பலன் பெற்றார்.
இது அவர் எனக்கு கூறியது தான்.
செவ்வாய், ஜனவரி 06, 2015
கடுக்காய்
மனிதன் ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். மகிழ்ச்சியான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய் பறக்கிறான்.
ஐம்பூதங்கள் ஒரு மனிதனை அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனுடைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.
உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'
உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.
இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படையாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்தவோட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய உடல் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.
எனவே, அறிவியல் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் அறிவியல் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், சூடு, காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. சூட்டால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற்றால் போக்கிக் கொள்வதே அறிவுடைமை.
நமது உடலை நீட்டித்து, ஆயுளை அதிகப்படுத்த சித்தர்களைச் சரணடைவதே நன்று. வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.
மனித உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமையான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார். கடுமையான நோய்கள் உடம்பைத் தாக்கினால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.
உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், உள்ளம் (மனம்), ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை உற்பத்தி(விருத்தி) செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் சூடு, வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.'
(எழுத்தாளர் சாரு (செயமோகனின் எதிரி :) ) இதை சாப்பிட்டு பலன் பெற்றாராம்)
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
வாழ்க வளமுடன்!
(மின்னஞ்சலில் வந்தது)
சாருவைப்பற்றி எழுதியது நான், இதை என் நண்பன் கூறினான் அவன் சாருவின் தீவிர பக்தன் :)
வியாழன், ஜனவரி 01, 2015
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)
![]() |
| பிராண முத்திரை - Prana Mudra |
![]() |
| பிராண முத்திரை Prana Mudra |
![]() |
| பிராண முத்திரை |
செய்முறை:
சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.
பயன்கள்
- கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
- சிறு நீரகத்துக்கு நல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.
ஞாயிறு, மே 18, 2014
சிறுநீரக கல் நீக்க அருமையான கை மருத்துவம்
குறைந்த செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டுகற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans or Green beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் அல்லது பச்சை பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒழுங்கில்லா விடிவில் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுத்த ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
நன்றி: பதிவு தொகுப்புகள்
CLEAN
YOUR KIDNEYS IN Rs. 2.00 OR EVEN LESS
Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?
It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA)and wash it clean
Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.
Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.
Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!

குறிப்பு: இணையத்தில் படித்த இதை வெட்டி ஒட்டி உள்ளேன். சிறுநீரக கல் தொல்லை இருந்தால் இதிலுள்ள முறையை முயன்று பார்க்கவும். பலன் கிடைத்தால் மகிழ்ச்சி.
திங்கள், மார்ச் 10, 2014
ஏழு சக்கரங்களும் அதன் குணாதிசயங்களும்…
தியானம் செய்யும் போது 7 சக்கரத்தை நினைத்து செய்ய வேண்டும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். மூலாதாரம் என்பது மூலாதாரத்தில் உள்ளது என்று சொல்லுவார்கள். எது மூலாதாரம்? என்று சொல்ல மாட்டார்கள். தெளிவா சொன்னா தவறாக சிலர் நினைத்துக்கொள்வதை தவிர்க்கலாம் அல்லவா. ஈசா அமைப்பினரின் பதிவில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததால் இங்கே அதை பகிர்கின்றேன்.
ஏழு சக்கரங்கள்:
இதை சற்றே கவனித்தால், இது நாம் வாழ்வை வாழும் தீவிரத்தின் ஏழு நிலைகள்.
உண்பதையும், உறங்குவதையும் வாழ்க்கையாகக் கொண்டவரை விட இன்பத்தை
நாடுபவருடைய வாழ்க்கை சற்று அதிகமான தீவிரத்துடன் நடக்கிறதா, இல்லையா? இந்த
உலகத்தில் ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று வேலையில்
இறங்குபவரின் வாழ்க்கை இன்பமே பிரதானமாய் இருப்பவரை விட அதிக தீவிரத்துடன்
இருக்கும். ஒரு கலைஞரோ அல்லது படைப்பாளியோ, இம்மூவரையும் விட அதிக
தீவிரத்துடன் இருப்பார்.
நீங்கள் விஷுத்திக்கு நகர்ந்து விட்டால், அது தீவிரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணம்; ஆக்னாவுக்கு நகரும்போது, அது இன்னும் அதிகமாகும். சஹஸ்ராரத்தை எட்டிடும்போது, விவரிக்க முடியாத பேரானந்தத்தில் திளைத்திடுவீர்கள். உங்கள் சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, பித்துப் பிடித்தாற் போன்ற பேரானந்தமே உங்கள் நிலையாகும். வெளியிலிருந்து எவ்வித தூண்டுதலும் இல்லை, எந்தக் காரணமும் இல்லை, என்றாலும் உங்கள் சக்தி ஒரு உச்சத்தை அடைந்துவிட்டதால் பேரானந்தக் களிப்பில் திளைப்பீர்கள்.
உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான். கோபம், துயரம், அமைதி, ஆனந்தம், பேரானந்தம் என அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலையிலான வெளிப்பாடு. அதனால் இந்த சக்கரங்கள் என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இருக்கும் ஏழு பரிமாணங்கள்
முழு தகவல்:
http://tamilblog.ishafoundation.org/aezhu-chakkarangalum-athan-gunathisayangalum/?utm_source=fb&utm_medium=social&utm_campaign=mysticism
ஏழு சக்கரங்கள்:
- மூலாதாரம் – ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது;
- ஸ்வாதிஷ்டானம் – பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது;
- மணிபூரகம் – தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது;
- அனாஹதம் – விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது;
- விஷுத்தி – தொண்டை குழியில்;
- ஆக்னா – புருவ மத்தியில்;
- சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் – உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது.
- உங்கள் சக்தி மூலாதாரத்தில் ஓங்கி இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உணவும், தூக்கமும்தான் பிரதானமாக இருக்கும்.
- உங்கள் சக்தி ஸ்வாதிஷ்டானத்தில் ஓங்கி இருந்தால், இன்பங்களை பின்தொடர்ந்தே தான் உங்கள் வாழ்க்கை இருக்கும் (அ) உடல் அளவிலான பல வகையான இன்பங்கள் உங்களை ஆக்கிரமிக்கும்.
- உங்கள் சக்தி மணிபூரகத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் செயல்வீரராக இருப்பீர்கள்; உலகத்தில் பல செயல்கள் செய்ய முனைவீர்கள்.
- உங்கள் சக்தி அனாஹதத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பீர்கள்.
- உங்கள் சக்தி விஷுத்தியில் ஓங்கி இருந்தால், நீங்கள் சக்திமிக்கவராக இருப்பீர்கள்.
- உங்கள் சக்தி ஆக்னாவில் ஓங்கி இருந்தால், அல்லது நீங்கள் ஆக்னாவை அடைந்துவிட்டால், புத்தி அளவில் நீங்கள் உணர்ந்துவிட்டவர் ஆவீர்கள். இந்த நிலை உங்களுக்கு அமைதியைத் தரும். அனுபவத்தில் உணரவில்லை என்றாலும் புத்தியில் முழுமையான புரிதல் ஏற்பட்டிருப்பதால், உங்களுக்குள் அமைதியும், நிதானமும் ஏற்படும். வெளியுலகத்தில் என்ன நடந்தாலும் அது உங்களை எவ்வகையிலும் பாதிக்காது.
நீங்கள் விஷுத்திக்கு நகர்ந்து விட்டால், அது தீவிரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணம்; ஆக்னாவுக்கு நகரும்போது, அது இன்னும் அதிகமாகும். சஹஸ்ராரத்தை எட்டிடும்போது, விவரிக்க முடியாத பேரானந்தத்தில் திளைத்திடுவீர்கள். உங்கள் சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, பித்துப் பிடித்தாற் போன்ற பேரானந்தமே உங்கள் நிலையாகும். வெளியிலிருந்து எவ்வித தூண்டுதலும் இல்லை, எந்தக் காரணமும் இல்லை, என்றாலும் உங்கள் சக்தி ஒரு உச்சத்தை அடைந்துவிட்டதால் பேரானந்தக் களிப்பில் திளைப்பீர்கள்.
உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான். கோபம், துயரம், அமைதி, ஆனந்தம், பேரானந்தம் என அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலையிலான வெளிப்பாடு. அதனால் இந்த சக்கரங்கள் என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இருக்கும் ஏழு பரிமாணங்கள்
முழு தகவல்:
http://tamilblog.ishafoundation.org/aezhu-chakkarangalum-athan-gunathisayangalum/?utm_source=fb&utm_medium=social&utm_campaign=mysticism
ஞாயிறு, மார்ச் 02, 2014
ஆகாச முத்திரை, வாயு முத்திரை
வாயு முத்திரை
வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.
சின் முத்திரையில் ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் நுனியை தொட்டுக்கொண்டிருப்போம்.
பலன்கள்
ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக்கொண்டிருப்பது.
சூனிய முத்திரையில் நடு விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டிருப்போம்.
பலன்கள்:
நடக்கும் போது இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்.

- ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.
- இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.
- சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும்.
- நடுக்குவாதம் (Parkinson) உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.
- கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்.
ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக்கொண்டிருப்பது.
சூனிய முத்திரையில் நடு விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டிருப்போம்.
பலன்கள்:
- இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.
- இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது. மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- இசிடிராய்டு (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.
நடக்கும் போது இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்.
வியாழன், பிப்ரவரி 06, 2014
பிருத்துவி, சூர்ய முத்திரை - உடல் எடை கூட , குறைய உதவும் முத்திரை
இப்ப நாம பிருத்துவி மற்றும் சூரிய முத்திரைகளை பார்க்கலாம். பிருத்துவி முத்திரை உடல் எடையை கூட்டக்கூடியது. அதாவது உடல் வலு குன்றியவர்கள் (பலவீனமானவர்கள்) இதை செய்யவேண்டும், அவர்களுக்கு இது மிகவும் உதவும்.
சூரிய முத்திரை நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும.
கொலஸ்ட்ரால் குறைந்தால் உடல் எடையும் குறையும். வெப்ப உடல் உடையோர் இதை கவனமாக செய்யவேண்டும் ஏன்னா இது சூட்டை அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை.
பிருத்துவி முத்திரை - மண்\பூமிக்கான முத்திரை
மோதிரவிரலின் நுனி பெரு விரலின் நுனியை தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
சூரிய முத்திரை (வெப்பத்திற்கான முத்திரை)
மோதிர விரலை மடக்கி அதை பெருவிரலின் அடியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். பெரு விரலால் மெதுவாக அழுத்திக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
இது பிருத்துவி "சாமக்" அல்லது சூரிய "வர்தக்"முத்திரை அதாவது பிருத்துவியை(மண்\பூமி) குறைக்கும் சூரிய அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை ஆகும். அதனால் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதை குறைவாக அதாவது குறைவான நேரம் செய்யவேண்டும். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். பித்தமும் இருக்கு உடல் குண்டாகவும் இருக்கு என்றால் குறைவான நேரம் செய்யுங்கள்.
சூரிய முத்திரை நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும.
கொலஸ்ட்ரால் குறைந்தால் உடல் எடையும் குறையும். வெப்ப உடல் உடையோர் இதை கவனமாக செய்யவேண்டும் ஏன்னா இது சூட்டை அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை.
பிருத்துவி முத்திரை - மண்\பூமிக்கான முத்திரை
- உடல் பலவீனத்தை போக்கும்.
- உடல் எடை அதிகரிக்க உதவும்.
- தோல் நிறத்தை மெருகேற்றும்.
- உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படும்.
சூரிய முத்திரை (வெப்பத்திற்கான முத்திரை)
மோதிர விரலை மடக்கி அதை பெருவிரலின் அடியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். பெரு விரலால் மெதுவாக அழுத்திக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
இது பிருத்துவி "சாமக்" அல்லது சூரிய "வர்தக்"முத்திரை அதாவது பிருத்துவியை(மண்\பூமி) குறைக்கும் சூரிய அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை ஆகும். அதனால் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதை குறைவாக அதாவது குறைவான நேரம் செய்யவேண்டும். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். பித்தமும் இருக்கு உடல் குண்டாகவும் இருக்கு என்றால் குறைவான நேரம் செய்யுங்கள்.
- தைராய்டு சுரப்பியை சரிசெய்ய உதவும்.
- உடம்பில் உள்ள கொழுப்பு , இரத்தக்கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகியவற்றை குறைப்பதால் உடல் எடை குறைய உதவிகிறது.
- செறிமானம் நன்றாக நடக்க உதவுகிறது.
- மனக்கலக்கத்தை குறைக்க உதவுகிறது.
வெள்ளி, ஜனவரி 03, 2014
செவி மற்றும் சின் (தியான) முத்திரைகள்
தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.
சின் முத்திரை
செய்முறை:
பலன்கள்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.
செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை
செய்முறை:
கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு)விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும்.
வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.
பலன்கள்:
காதுவலி குறையும்.
சின் முத்திரை
செய்முறை:
- உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
- ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொடவேண்டும். மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக்கொண்டிருக்கக்கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம். மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.
பலன்கள்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.
செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை
செய்முறை:
கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு)விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும்.
வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.
பலன்கள்:
காதுவலி குறையும்.
லேபிள்கள்:
சின் முத்திரை,
சூன்ய முத்திரை,
செவி முத்திரை
செவ்வாய், டிசம்பர் 17, 2013
நலமா வாழ யோக முத்திரை
விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும். ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம். இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்). சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.
அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.
வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்
முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு
ஒரே ஒரு தளத்தில் மட்டுமே மேற்கண்ட தகவலை பார்த்தேன். வேறு எதிலும் குறிப்பிட்ட மூலத்தை அதிகரிக்க என்ற குறிப்பு இல்லை. இதற்கு காரணம் வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் என்று கருதுகிறேன். சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.
வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்கிறார்கள். வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் என்கிறார்கள். கபம் தான் கடைசி.
வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.
சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.
உணவுகள்:
வாதம்
வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
பித்தம்
பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்
கபம்
பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.
வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.
நானும் நிறைய இடத்துல படிச்சேன் எல்லாத்துலயும் வாதம் பித்தம் கபம் அதிகரிச்சா என்ன பண்ணுவது என்று தான் போட்டிருக்கே தவிர இவை குறைஞ்சா என்ன பண்ணுவது என்று போடவில்லை. அதனால இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும் என்று நினைக்கின்றேன். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.
முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..
நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.
உதவி: கூகுள் ஆராய்ச்சி மூலம் கிடைத்த பல்வேறு இணைய தளங்கள், பதிவுகள், புத்தகங்கள்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
| கை விரல் | குறிக்கும் மூலம் |
|---|---|
| பெரு விரல் | சூரியன் |
| ஆட்காட்டி விரல் | காற்று |
| பாம்பு(நடு) விரல் | ஆகாயம் (வானம்) |
| மோதிர விரல் | மண் |
| சுண்டு விரல் | நீர் |
நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்). சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.
- நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)
- பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)
- வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)
வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்
முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு
- விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.
- விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.
- பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள் (கவனிக்க)
ஒரே ஒரு தளத்தில் மட்டுமே மேற்கண்ட தகவலை பார்த்தேன். வேறு எதிலும் குறிப்பிட்ட மூலத்தை அதிகரிக்க என்ற குறிப்பு இல்லை. இதற்கு காரணம் வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் என்று கருதுகிறேன். சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.
வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்கிறார்கள். வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் என்கிறார்கள். கபம் தான் கடைசி.
வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.
சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.
உணவுகள்:
வாதம்
வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
பித்தம்
பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்
கபம்
பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.
வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.
நானும் நிறைய இடத்துல படிச்சேன் எல்லாத்துலயும் வாதம் பித்தம் கபம் அதிகரிச்சா என்ன பண்ணுவது என்று தான் போட்டிருக்கே தவிர இவை குறைஞ்சா என்ன பண்ணுவது என்று போடவில்லை. அதனால இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும் என்று நினைக்கின்றேன். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.
முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..
நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.
உதவி: கூகுள் ஆராய்ச்சி மூலம் கிடைத்த பல்வேறு இணைய தளங்கள், பதிவுகள், புத்தகங்கள்.
லேபிள்கள்:
கபம்,
பித்தம்,
முத்திரை,
யோக முத்திரை,
வாதம்
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
பாட்டி மருத்துவம்
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்
குறிப்பு:-
முகநூலில் வந்தது இங்கு. அதனால் எல்லா குறிப்புகளும் நம்பகத்தன்மை உடையவா என்று தெரியாது.
வியாழன், செப்டம்பர் 22, 2011
எண்ணெய் உள்இழுத்தல்
எண்ணெய் உள்இழுத்தல் (OIL PULLING) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் புகழ்பெற்று வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு
சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் உள்இழுத்தலை எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
இன்றைக்கு புகழ்பெற்று கொண்டு வரும் எண்ணெய் உள்இழுத்தலை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
எண்ணெய் உள்இழுத்தல் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது. தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கருத்துகணிப்பில் தெரிவித்திருந்தனர்.

எண்ணெய் உள்இழுத்தலை எப்படி செய்வது?
காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது
உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நிரூபிக்கப்பட்ட உண்மை
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல் & நுரையீரல்நோய் , புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் நாளம் (பொதுவாக கால்களில் காணப்படும் கணுப்புடைப்பு நாளம் அல்லது விரிவடைந்த நாளம்), வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வலி நிவாரணி
தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு மூன்று முறை
எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
எண்ணெய் உள்இழுத்தலை செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய மருத்துவ முறையை பின் பற்றுவதோடு சுத்தமான காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் , நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
மின்னஞ்சலில் வந்தது
கலைச்சொல்லுக்கு விக்சனரியை பார்க்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)